இந்த சந்திப்பின்போது ஆம்ஸ்ட்ராங் கொலை விவகாரம், தமிழகத்தில் நடக்கும் என்கவுண்டர்கள், சட்டம் ஒழுங்கு நிலவரம் குறித்தும் பேசப்பட்டு இருப்பதாகவும், ஆளுநர் நீடிப்பு குறித்த அறிவிப்பு வெளியானதும் இந்த பிரச்சனையில் ஆளுநர் தலையிடுவார் என்றும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் தலைவர் மோகன் பகவத் சென்னைக்கு சமீபத்தில் வந்திருந்த போது அண்ணாமலை குறித்த புகார்கள் அவரிடம் சென்றதாக கூறப்படுகிறது. ஆனால் ஆர்எஸ்எஸ் அமைப்பின் தமிழக தலைவர், மிக வேகமாக வளர்ந்து வரும் அரசியல் தலைவர் மீது புகார் வருவது சகஜம் தானே, இதையெல்லாம் கண்டு கொள்ளாதீர்கள் என்று மோகன் பகவத் இடம் கூறியதாகவும் இருப்பினும் அண்ணாமலை பற்றி வரும் செய்திகள் நல்லவிதமாக இல்லை என்று மோகன் பகவத் சலித்துக் கொண்டதாகவும் கூறப்படுகிறது.