தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்புகளின் காரணமாக பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டதால் செமஸ்டர் தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டன. இந்நிலையில் இறுதி ஆண்டு தேர்வுகள் தவிர்த்து மற்ற தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. இறுதி ஆண்டு தேர்வுகள் முடிவடையாமல் உள்ளதால் மாணவர்கள் பணிக்கு செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் அண்ணா பல்கலைகழகம் வெளியிட்ட அறிவிப்பில் இறுதி ஆண்டு மாணவர்களுக்கு செமஸ்டர் தேர்வுகள் ஆன்லைன் மூலம் நடத்தவும், அதை எழுத முடியாதவர்களுக்கு ஆகஸ்டுக்கு பிறகு நேரடி தேர்வு நடத்தவும் திட்டமிட்டிருப்பதாக தெரிவித்தது. தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பில் நேரடி தேர்வு அக்டோபர் 28 முதல் நவம்பர் 9 வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சக பொறியியல் மாணவர்களுக்கு ஆன்லைன் வழி வகுப்புகள் ஆகஸ்டு 12 முதலாக தொடங்குவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது