கொரோனா பரவல் எதிரொலி: அண்ணா பல்கலையின் விடுமுறை அறிவிப்பு!

வியாழன், 6 ஜனவரி 2022 (07:24 IST)
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக தமிழகத்தில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன என்பதும் இரவு நேர ஊரடங்கு, முழு ஊரடங்கு, பள்ளி கல்லூரிகள் ,,மூடல் உள்ளிட்ட பல கட்டுப்பாடுகளை நேற்று பார்த்தோம்
 
இந்த நிலையில் தற்போது அண்ணா பல்கலைக்கழகம் பொறியியல் கல்லூரிகளுக்கான விடுமுறை குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் அனைத்து பொறியியல் கல்லூரிகளுக்கும் இன்று முதல் அதாவது ஜனவரி 6 முதல் ஜனவரி 20ஆம் தேதி வரை விடுமுறை என அண்ணா பல்கலை கழகத்தின் பதிவாளர் அறிவித்துள்ளார்
 
மேலும் பொறியியல் மாணவர்கள் செமஸ்டர் தேர்வுக்கு தயாராக வேண்டும் என்றும் அரசு அறிவித்துள்ள வழிமுறைகளை முழுமையாக பின்பற்ற கல்லூரி நிர்வாகத்தினர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
 
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்