பேரறிஞர் அண்ணா நினைவுதினம்… முதல்வர் நினைவஞ்சலி!

புதன், 3 பிப்ரவரி 2021 (09:15 IST)
திராவிட முன்னேற்றக் கழகத்தை தொடங்கிய முன்னாள் தமிழக முதலமைச்சர் பேரறிஞர் அண்ணாவின் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.

அண்ணாதுரை  செப்டம்பர் 15, 1909 ல் காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடராச முதலியார் மற்றும் பங்காரு அம்மாள் தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தார். சென்னை பச்சையப்பன் கல்லூரில் பட்டப்படிப்பு முடித்த அவர், பச்சைப்பன் உயர் நிலைப்பள்ளியில் ஆங்கில ஆசிரியராக பணியாற்றினார். தந்தை பெரியாரின் கொள்கைகளில் ஈர்க்கப்பட்ட அண்ணா, அவருடன் சேர்ந்து பணியாற்றினார். பின் பெரியாரோடு ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால்  1949 ல், பெரியாரை விட்டு விலகி, திராவிட முன்னேற்றக் கழகம் (தி.மு.க) என்ற புதிய இயக்கமொன்றை நிறுவினார்.

1967 ஆம் ஆண்டு காங்கிரஸை ஆட்சிக் கட்டிலில் இருந்து இறங்கி திமுகவின் முதல்வராக பதவியேற்றார். அன்றிலிருந்து 53 ஆண்டுகளாக தமிழகத்தை ஒரு திராவிடக் கட்சிதான் ஆட்சி செய்து வருகிறது. இன்று அவரின் 51 ஆவது நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. அதை முன்னிட்டு தமிழக முதல்வரான எடப்பாடி பழனிச்சாமி அண்ணாவுக்கு நினைவஞ்சலி செலுத்தியுள்ளார்.

தன் டிவிட்டர் பக்கத்தில் ‘“தமிழ் மொழி, தமிழ் இனம் என எந்நேரமும் தமிழ்! தமிழ்! என தமிழ் சமூகத்திற்காகவே வாழ்ந்திட்ட பேரறிஞர் அண்ணா அவர்களை அவர்தம் நினைவு தினத்தில், போற்றி வணங்கி மகிழ்கிறேன்.’ எனக் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்