இந்நிலையில் நேற்று மாலை திடீரென ஜெயலலிதாவிற்கு மாரடைப்பு ஏற்பட்டதாக தகவல் பரவியது. மேலும், லண்டன் மருத்துவர் ரிச்சர்டு பீலே ஆலோசனையின் பேரில் இருதய மருத்துவர்கள் ஜெயலலிதாவிற்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக அப்பல்லோ நிர்வாகம் அறிக்கை வெளியிட்டது.
மேலும், அவருக்கு ஆஞ்சியோ பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அவரின் இருதயநாள அடைப்பை சீர் செய்வதர்காக மருத்துவர்கள் அந்த பரிசோதனையை மேற்கொண்டனர். பொதுவாக மாரடைப்பு ஏற்பட்டவருக்கு, உடலில் ரத்த ஓட்டத்தை சீராக்குவதற்காக இந்த சிகிச்சை செய்யப்படும். இதைத் தொடர்ந்து அவரின் உடல்நிலை அடுத்த 24 மணி நேரத்திற்கு மருத்துவர்களால் கண்காணிக்கப்படும் எனத் தெரிகிறது.