நாங்கள் கூட்டணியில் இணைகிறோம், எங்களுக்கு தொகுதிகள் கூட வேண்டாம், எங்களது மக்களுக்கு இட ஒதுக்கீடுமட்டும் கொடுங்கள் போதும், அதற்காக நாங்கள் வெற்று பாத்திரத்தில் கூட கையெழுத்து போட தயாராக இருக்கிறோம் என்று எடப்பாடி பழனிசாமியிடம் தெரிவித்ததாக அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
கடந்த தேர்தலில் கொடுக்கும் தொகுதியை ஏற்றுக்கொண்டால் 10.5% இடஒதுக்கீடு கொடுப்பதாக கூறினர். எங்களுக்கு தொகுதிகளே வேண்டாம், இடஒதுக்கீடு கொடுங்கள். வெற்றுப் பத்திரத்தில் கூட கையெழுத்து போட்டு தருகிறோம் என ராமதாஸ் கூறினார் என்று அன்புமணி ராமதாஸ் பேசினார்.