மதுவை அறிமுகம் செய்தவர் கருணாநிதி; டாஸ்மாக் கடைகளை திறந்தவர் ஜெயலலிதா- அன்புமணி பேச்சு

சனி, 5 செப்டம்பர் 2015 (12:20 IST)
தமிழகத்தில் மதுவை அறிமுகம் செய்தவர் கருணாநிதி என்றும், டாஸ்மாக் கடைகளை தமிழகம் முழுவதும் திறந்து வைத்து வினியோகம் செய்து வருபவர் ஜெயலலிதா என்றும் குற்றம்சாட்டியுள்ளார்.

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரில் பாட்டாளி மகளிர் சங்கம் சார்பில் மது ஒழிப்பு போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் கலந்து கொண்டு பேசிய பாமக இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியபோது,

கடந்த 44 ஆண்டுகளில் திமுக அரசும் அதிமுக அரசும் 7 ஆயிரம் மதுக்கடைகளை திறந்த வைத்துள்ளனர். மேலும் தமிழகத்தில் மதுக்கடைகளை திறந்து மதுவை அறிமுகம் செய்தவர் கருணாநிதி என்றும், டாஸ்மாக் கடைகளை தமிழகம் முழுவதும் திறந்து வைத்து வினியோகம் செய்து வருபவர் ஜெயலலிதா என்றும் கூறினார். காமராஜர் முதலமைச்சராக இருந்தபோது தமிழகம் முழுவதும் 12 ஆயிரம் பள்ளிக்கூடங்களை திறந்து வைத்துள்ளார். ஆனால், கடந்த 44 ஆண்டுகளில் திமுகவும் அதிமுக தமிழகத்தை ஆண்டு 7 ஆயிரம் மதுக்கடைகளை திறந்துள்ளன.

தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் மதுக்கடைகள் மூடப்படும் என்று கருணாநிதி அறிவித்துள்ளார். ஆனால் அதிக மது ஆலைகளை நடத்துபவர்களே தி.மு.க.வினர் தான் என்று அன்புமணி குற்றம்சாட்டியுள்ளார்.

தமிழகத்தில் மொத்தம் 10 மது ஆலைகளை அரசியல் கட்சியினர் நடத்துகின்றனர். அவற்றில் 5 ஆலைகளை தி.மு.க.வினரது எனறும், 3 ஆலைகளை அ.தி.மு.க.வினரது என்றும்
இரு ஆலைகளை காங்கிரஸ் கட்சியினரது என்றும் தெரிவித்தார் மேலும், தமிழகத்தின் வருவாய் 1 லட்சத்து 5 ஆயிரம் கோடியில் 36 ஆயிரம் கோடி டாஸ்மாக்கில் வருகிறது என்று குறிப்பிட்டார்.

வெப்துனியாவைப் படிக்கவும்