அறிவில்லாத அதிமுகவை பார்த்து சிரிக்கிறார்கள்: அன்புமணி ராமதாஸ் விளாசல்!

சனி, 31 டிசம்பர் 2016 (09:10 IST)
தமிழக முதலமைச்சராக இருந்த ஜெயலலிதாவுக்கு பாரத ரத்னா மற்றும் நோபல் பரிசுகள் வழங்க வேண்டும் என அதிமுக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றினார்கள். இதனை விமர்சித்து பேசியுள்ளார் பாமக எம்.பி. அன்புமணி ராமதாஸ்.


 
 
சென்னை தி.நகரில் பாமக பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பாமக இளைஞரணி தலைவரும் தர்மபுரி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான மருத்துவர் அன்புமணி ராமதாஸ் கலந்துகொண்டு பேசினார்.
 
இதில் பேசிய அவர், தமிழகத்தில் ஏராளமான பிரச்சனைகள் உள்ளன. ஆனால் மாநில அரசு மத்திய அரசிடம் ஜெயலலிதாவுக்கு பாரத ரத்னா விருது வழங்க கோரிக்கை வைத்துள்ளனர். இவர் ஏற்கனவே இரண்டு முறை ஊழல் வழக்கில் சிறைக்கு சென்றுள்ளார். அவருக்கு எப்படி பாரத ரத்னா விருது வழங்க முடியும்.
 
இது கூட பரவாயில்லை. ஜெயலலிதாவுக்கு நோபல் பரிசு வழங்க வேண்டும் என பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறார்கள். நோபல் பரிசு என்பது உயிருடன் இருப்பவர்களுக்கு வழங்கப்படுவது. இந்த அறிவு கூட இல்லாமல் தீர்மானம் நிறைவேற்றியுள்ள அதிமுகவினரை பார்த்து டெல்லியில் சிரிக்கிறார்கள் என கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்