அரசியல் சூப்பர் ஸ்டாரா அன்புமணி? டுவிட்டரில் வைரல்
வெள்ளி, 9 அக்டோபர் 2020 (10:29 IST)
பாமக நிறுவனர் ராமதாஸ் மகனும் முன்னாள் மத்திய அமைச்சரும் மாநிலங்களவை எம்பியுமான அன்புமணி இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருவதை அடுத்து அவருக்கு பாமகவினர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். மேலும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் #HBDPoliticalSuperstarஎன்ற ஹேஷ்டேக் தற்போது டுவிட்டரில் வைரலாகி வருகிறது. சினிமாவில், விளையாட்டில் சூப்பர் ஸ்டார்கள் இருப்பது போல் அரசியலில் அன்புமணிக்கு சூப்பர் ஸ்டார் பட்டம் கொடுத்து பாமகவினர் அழகு பார்த்து வருகின்றனர்
இந்த ஹேஷ்டேக்கை ஏராளமானோர் டுவிட்டரில் பகிர்ந்து வருவதால் தமிழக அளவில் இந்த ஹேஷ்டேக் தற்போது ட்ரெண்டிங்கில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது