பள்ளிகள் திறக்கப்படுவது எப்போது? அன்பில் மகேஷ் பேட்டி!

திங்கள், 14 ஜூன் 2021 (08:22 IST)
தமிழ்நாட்டில் பள்ளிகள் திறப்பு எப்போது என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தகவல். 

 
தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் மாணவர் சேர்க்கை குறித்த நிர்வாகப் பணிகளை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழ்நாட்டில் பள்ளிகள் திறப்பு எப்போது என்பது குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தகவல் தெரிவித்துள்ளார். 
 
அவர் தெரிவித்ததாவது, கடந்த ஆண்டு நீதிமன்ற உத்தரவுப்படி தனியார் பள்ளிகள் 75 சதவீதம் கட்டணம் வசூலிக்கலாம் என்று உத்தரவிட்டது. அதன்படியே நடப்பாண்டில் தனியார் பள்ளிகளில் கட்டணம் வசூலிக்க வேண்டும் அதுவும் இரண்டு தவணைகளாக அந்த கட்டணத்தை வசூலிக்க வேண்டும்.
 
தமிழ்நாடு முதல்வர் ஊரடங்கு தொடர்பான முழுமையான தளர்வுகள் அளித்த பிறகு பள்ளிகள் தொடங்கலாம் என உத்தரவிட்டால் அதற்காக தயார் நிலையில் உள்ளோம். மேலும் தமிழ்நாட்டில் பள்ளிகள் திறப்பு குறித்து நாளை முதல்வரிடம் கலந்து ஆலோசித்து பின் அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்