சசிகலா தலைமையேற்க இதுவா நேரம்? -ஆனந்தராஜ் காட்டம்

புதன், 28 டிசம்பர் 2016 (14:09 IST)
தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா கடந்த 5-ஆம் தேதி மரணமடைந்தார். இதனையடுத்து அதிமுகவின் தலைமை பதவியான பொதுச்செயலாளர் பதவியை சசிகலா ஏற்கவேண்டும் என கோரிக்கை நிலவி வந்தது.
 

 


இந்நிலையில் இதனை கடுமையாக விமர்சித்தார் நடிகர் ஆனந்தராஜ். ஜெயலலிதா தற்போது தான் இறந்திருக்கிறார் அதற்குள் அந்த பதவி பற்றி பேச வேண்டாம். சசிகலா தலைமை பதவியை ஏற்க இது சரியான நேரமில்லை என கூறிவந்தார் ஆனந்தராஜ்.

இந்நிலையில் நாளை நடைபெற உள்ள அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் சசிகலா பொதுச்செயலாளராக பதவியேற்க ஏற்பாடுகள் மும்மரமாக நடைபெற்று வருவதாக தகவல்கள் வருகின்றன. இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த நடிகர் ஆனந்தராஜ் அதிமுகவில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். அப்போது அவர் கூறியபோது, செங்கோட்டையன் , பொன்னையன் பேச்சு வருத்தம் அளிக்கிறது. ஜெயலலிதாவை யாருடனும் ஒப்பிட்டு பேசுவதை தவிர்க்க வேண்டும். சுய லாபத்திற்காகவே சசிகலாவை சில அமைச்சர்கள் ஆதரிக்கிறார்கள. சசிகலா அதிமுக தலைமையேற்க இது தகுந்த நேரம் இல்லை.

மக்கள்தான் யார் தலைவர் என சொல்லவேண்டும். தொண்டர்கள் விரும்புகிற தலைமை வரவேண்டும் என்று கூறினார்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்