ஆம்பூரில் அசைவம் சார்ந்த சிறிய, பெரிய ஓட்டல்கள் பெருமளவில் இருக்கின்றன. மாலை நேரங்களில் தள்ளுவண்டி கடைக்களில் 60, 70 ரூபாய்க்கே மட்டன் பிரியாணி சுடச்சுட விற்பனையாகும். இவ்வளவு மலிவாக மட்டன் பிரியாணி தரமுடியாது என்று விசாரித்தபோது தான் கசாப்புக் கடைக்காரர்களோடு சேர்ந்துகொண்டு மட்டனில் நாய்க் கறியைக் கலந்து கொடுக்கிறார்கள் என்ற உண்மை தெரியவந்துள்ளது.