விஜயிடம் 400 கோடி கேட்கும் அமலாபால் – அதிரும் கோலிவுட்

வெள்ளி, 19 ஆகஸ்ட் 2016 (09:50 IST)
இயக்குனர் விஜய், அமலாபால் விவாகரத்து விஷயத்தில் பல முக்கிய புள்ளிகள் சமரசம் பேசி இருவரையும் சேர்த்து வைக்கும் முயர்ச்சியில் ஈடுபட்டுவந்தனர்.


 


நடிகர் மோகன்லாலும்  இயக்குனர் விஜய் தரப்பில் அமலாவிடம் சமரசம் பேசியதாக தகவல் வெளியானது. ஆனால் அமலாபால் தன் நிலையில் இருந்து இறங்கி வருவதாக தெரியவில்லை. நீதிமன்றம் சென்றால், வழக்கு நீண்ட நாட்கள் நடக்கும் என்று, நினைத்த, அமலாபால் தரப்பு, பிரச்சனையை விரைவாக முடித்து, நடிப்பில் கவனம் செலுத்த முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

அதனால், சத்தமில்லாமல் இருவரும் பிரிந்துவிட, விஜையிடம் அமலாபால் தரப்பில் 400 கோடி எதிர் பார்ப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளதை கேட்டு கோடம்பாக்கம் அதிர்ந்து போய் உள்ளது. 

வெப்துனியாவைப் படிக்கவும்