நீ எங்க வேணாலும் கூட்டணி வை.. இந்தா வர்ரேண்டா..! – டிடிவி தினகரனுக்கு மன்சூர் அலிகான் சவால்!

Prasanth Karthick

புதன், 10 ஜனவரி 2024 (10:44 IST)
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அமமுக பொதுசெயலாளர் டிடிவி தினகரன் போட்டியிடும் தொகுதியில் அவரை எதிர்த்து போட்டியிடப் போவதாக நடிகர் மன்சூர் அலிகான் தெரிவித்துள்ளார்.



நாடாளுமன்ற தேர்தல் எதிர்வரும் மே மாதத்தில் நடைபெற உள்ள நிலையில் கூட்டணி பேச்சுவார்த்தை இப்போதே களைகட்ட தொடங்கியுள்ளது. இந்நிலையில் தற்போது நடிகர் மன்சூர் அலிகான், அமமுக கட்சி பொதுச்செயலாளர் டிடிவி தினகரனுக்கு சவால் விடும் வகையில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் “1999 இல் புதிய தமிழகம் சார்பில், கட்டைவண்டி சின்னத்தில் போட்டியிட்டு ஒரு லட்சம் வாக்குகள் பெற்றேன். முதன்முதலில் களம் இறங்கிய தினகரன், புரட்சித் தலைவி அம்மாவின் பெயரால் வெற்றிபெற்றார். ஆனால் அந்த தாயை எப்படி ஒழித்தார்கள், எவ்வளவு கொடூரம் செய்தார்கள் என்று நாடறியும்.

நான் அம்மாவின் மரணத்தை விசாரித்து வழக்கு போட்டு எல்லா ஆவணங்களும் வைத்திருக்கிறேன். அவர்கள் குடும்பம் எத்தனை லட்சம் கோடி அடித்து உலையில் போட்டார்கள்.

எப்படி அம்மாவின் கொள்கைகளுக்கு எதிராக செயல்பட்டு, அவ ரிடம் நயவஞ்சகம் செய்து, மக்களுக்கு, தமிழ்நாட்டுக்கு துரோகம் இழைத்து ஆலமரமான, அன்பின் ஆண்டாளான, ''அம்மாவை வேரடி மண்ணோடு நாடகமாடி,ஆளுநர் உட்பட யாரையும் பார்க்கவிடாது மாய்த்த கொடுரத்தை எடுத்து சொல்ல, மக்களோடு மக்களாக நின்று 1999-ல், நான் தோற்ற அதே பெரியகுளம் தேனி மண்ணில் நான் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு, துரோகிகளை மண்ணை கவ்வ வைப்பேன்.

இது சத்தியம். எந்த ஆளான கட்சியுடன் கூட்டணி வைத்து வந்தாலும் சரி, இந்தா வர்ரேன்டா!!!” என்று சூளுரைத்துள்ளார்.

இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் திடீரென மன்சூர் அலிகான், டிடிவி தினகரனை வம்புக்கு இழுப்பது ஏன்? தன்னை ட்ரெண்டிங்கில் வைத்துக் கொள்ள மன்சூர் முயற்சிக்கிறாரா? என்ற கேள்விகளும் எழுந்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்