இந்நிலையில் இதுகுறித்து பேசிய அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைமை செய்தித்தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜேவாலா, அவர்கள் 7 பேரும் நாட்டின் பிரதமரையே கொன்றவர்கள், சோனியா காந்தி, ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் பெரிய மனதுடன் ராஜீவ் கொலை கைதிகள் மீது விரோதம் இல்லை என்று கூறி இருக்கலாம். ஆனால் அவர்கள் 7 பேரும் தண்டிக்கப்படவேண்டியவர்கள்.
மத்திய அரசும், தமிழக அரசும் இந்த விஷயத்தில் அரசியல் செய்து வருகின்றனர். ஒரு அரசின் கடமை பயங்கரவாதிகளை தண்டிப்பதா? பாதுகாப்பதா? இப்பொழுது அவர்கள் செய்து கொண்டிருக்கும் செயல் அவர்களை பாதுகாப்பதன் அறிகுறியே ஆகும்.