ஐயப்பன் அருளை பெற அகில பாரதீய ஐயப்ப தர்ம பிரச்சார சபா அசத்தல்

சனி, 28 நவம்பர் 2020 (22:55 IST)
கொரோனா காலம் என்பதினால் ஐயப்பனின் அருளை பெற என் வீடு என் கோயில் என்கின்ற தாரக மந்திரத்தினோடு ஐயப்பன் அருளை பெற அகில பாரதீய ஐயப்ப தர்ம பிரச்சார சபா அசத்தல் – தமிழகம் முழுவதும் ஐயப்ப பக்தர்கள் வீட்டிலிருந்தே விரதம் கடைபிடித்து ஐயப்பனின் அருளை பெற்று வருகின்றனர்.
 
 
கொரோனா காலம் என்பதினால் ஐயப்பனின் அருளை பெற என் வீடு என் கோயில் என்கின்ற தாரக மந்திரத்தினோடு ஐயப்பன் அருளை பெற அகில பாரதீய ஐயப்ப தர்ம பிரச்சார சபா அசத்தல் – தமிழகம் முழுவதும் ஐயப்ப பக்தர்கள் வீட்டிலிருந்தே விரதம் கடைபிடித்து ஐயப்பனின் அருளை பெற்று வருகின்றனர்.
 
அகில பாரதீய ஐயப்ப தர்ம பிரச்சார சபாவின் சார்பில் ஆண்டு தோறும் அந்த அமைப்பின் சங்க கொடியேற்றம் நிகழ்ச்சியானது தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் நடைபெறுவது வழக்கம், இந்நிலையில் கொரோனா காலம் என்பதினால் தமிழகத்தின் பல்வெறு பகுதிகளில் கூட்டம் நெரிசல் இல்லாமல், ஆங்காங்கே கொடியேற்ற நிகழ்ச்சியோடு என் வீடு என் கோயில் என்கின்ற தாரக மந்திரத்தினை முழக்கமிட்டு அதன்படி அகில பாரதீய ஐயப்ப தர்ம பிரச்சார சபா மூலம், தேசிய தலைவர் திரு.கே.ஐயப்பதாஸ் அவர்களின் அறிவுறுத்தலின் படி தேசிய பொதுச்செயலாளர் திரு.ஆர்.வெங்கடேஷன் ஆலோசனையின் கீழ், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள கலியுக வரதன் ஐயப்பனுக்கு விரதம் இருக்கப்பட்டு, பூஜைகளும் எங்கேயும் கும்பல் இல்லாமல் கடைபிடிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், அகில பாரதீய ஐயப்ப தர்ம பிரச்சார சபாவின் கரூர் மாவட்ட அமைப்பின் சார்பாக கடந்த கார்த்திகை ஒன்றாம் தேதி அன்று கரூர் அடுத்த காந்திகிராமம் பகுதியில் அமைந்துள்ள கிருஷ்ணா நகர் பகுதியில் வீற்றிருக்கும் அலுவலகத்தில் அகில பாரதீய ஐயப்ப தர்ம பிரச்சார சபாவின் தேசிய செயலாளர் வெங்கடேஷன் தலைமையில் சங்க கொடியேற்றம் நிகழ்ச்சி மிகவும் சிறப்பாக நடைபெற்றது. அகில பாரதீய ஐயப்ப தர்ம பிரச்சார சபாவின் மாநில தலைவர் எல்.ஆர்.ராஜூ அவர்களின் முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியினை தொடர்ந்து ஐயப்பனுக்கு மகா தீபாராதனையும், அன்னதானமும் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கரூர் மாவட்ட தலைவர் சங்கரநாராயணன், கரூர் மாவட்ட செயலாளர் ரமேஷ்,  மாவட்ட பொருளாளர் வாசுதேவன், மாநில செயற்குழு பொறுப்பாளர் பி.எஸ்.ரகுநாதன், மாநில மகளிரணி அமைப்பாளர் திருமதி குணவதி,  மாநில, மாவட்ட நிர்வாகிகள் மட்டுமில்லாமல், சபா உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் என்று ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்