பிறந்த நாள் விழாவை ரத்து செய்த அழகிரி - பின்னணி என்ன?

புதன், 25 ஜனவரி 2017 (19:24 IST)
இந்த ஆண்டு தனது ஆதரவாளர்கள் கொண்டாட இருந்த தனது பிறந்த நாள் விழாவை முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரி ரத்து செய்துள்ளார்.


 

 
ஒவ்வொரு வருடமும் அழகிரின் பிறந்த நாளை, அவரின் ஆதரவாளர்கள் மதுரையில் மிகவும் விமர்சையாக கொண்டாடுவது வழக்கம். இந்த ஆண்டு ஜனவரி 30ம் தேதி அவருக்கு 64 வயது பிறக்கிறது. எனவே, வழக்கம் போல் அவரை குஷிப்படுத்த அவரின் ஆதரவாளர்கள் முடிவெடுத்திருந்தனர். 
 
ஆனால், இந்த ஆண்டு தனது பிறந்து நாளை கொண்டாட வேண்டாம் என அழகிரி கூறிவிட்டாராம். தனது தந்தை மற்றும் திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலையை கருத்தில் கொண்டு அவர் இந்த முடிவு எடுத்திருப்பதாக தெரிகிறது. 
 
இது அவரின் ஆதரவாளர்களுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியிருப்பதாக கூறப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்