பெண்களுக்கு ஆபத்தாக அமையும் ஏஐ வெப்சைட்டுகள் - சைபர் நிபுணர்கள் எச்சரிக்கை

ஞாயிறு, 10 டிசம்பர் 2023 (11:41 IST)
பெண்களுக்கு ஆபத்தான  அமையும் ஏஐ வெப்சைட்டுகள் என சைபர் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

இணையதள வசதி எளிதாகக் கிடைக்கும்  நிலையில் சமூக வலைதலங்களின் பயன்பாடு அதிகரித்துள்ளது.  இதன் மூலம் தற்போது வெறுப்புணர்வு அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில், செயற்கை தொழில் நுட்பம் மூலம் சமீப காலமாக பரவி வரும் டீப் ஃபேக் வீடியோவால் பாதிக்கப்படுகின்றனர்.

இதனால் நடிகை ராஷ்மிகா மந்தனா, கஜோல், பிரியங்கா சோப்ரா உள்ளிட்டோர் பாதிக்கப்படுள்ளனர்.

இந்த நிலையில், பெண்களுக்கு ஆபத்தான  அமையும் ஏஐ வெப்சைட்டுகள் என சைபர் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

அதில், பெண்களின் ஆடைகளை அகற்றி, போலியான ஆபாச படங்கள உருவாக்கும் ஏஐ இணயதளங்கள் பயன்பாடு அதிகரித்து வருகிறது.

கடந்த செப்டம்பர் மாதம் சுமார் 2.4 கோடிப் பேர் இது போன்ற இணையதளங்களை பயன்படுத்தியுள்ளதாக ஆய்வறிக்கையில் தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் பெண்ணின் படம் கிடைத்தால் போலியான ஆபாச படம் உருவாக்க  முடியும் என்ற சூழல் உருவாகியுள்ளதாக எச்சரித்துள்ளது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்