பள்ளிகளில் தமிழ் கட்டாயம்.. திருக்குறளை தேசிய நூலாக்க வேண்டும்: அதிமுக மாநாட்டில் தீர்மானம்..!
ஞாயிறு, 20 ஆகஸ்ட் 2023 (18:49 IST)
தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் தமிழை கட்டாய பாடமாக்க வேண்டும் என்றும் திருக்குறளை தேசிய நூலாக வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் இயற்றப்பட்டுள்ளன.
மதுரையில் அதிமுக மாநாடு இன்று பிரம்மாண்டமாக நடைபெற்றது. எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடந்த இந்த மாநாட்டில் லட்சக்கணக்கான அதிமுக தொண்டர்கள் கலந்து கொண்டனர் இந்த நிலையில் இந்த மாநாட்டில் சில தீர்மானங்களை இயற்றப்பட்டுள்ளன. இந்த மாநாட்டில் இயற்றப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு:
தீர்மானம் 1: மாநாட்டை நடத்திய நிர்வாகிகளுக்கு பாராட்டு தெரிவிப்பது
தீர்மானம் 2: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு வாழ்த்தும், பாராட்டும் தெரிவிப்பது
தீர்மானம் 3: எடப்பாடி பழனிச்சாமியின் கோரிக்கையை ஏற்று 2 கோடி உறுப்பினர்களை சேர்த்த நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு பாராட்டு தெரிவிப்பது
தீர்மானம் 4: திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க மத்திய அரசை வலியுறுத்துவது
தீர்மானம் 5: தமிழகத்தில் உள்ள அனைத்து கல்வி நிலையங்களிலும் தமிழை கட்டாயமாக்க மத்திய அரசை வலியுறுத்தல்
தீர்மானம் 6: அரசியலமைப்பு சட்டங்களில் திருத்தங்கள் கொண்டுவந்து அனைத்து அட்டவணை மொழிகளையும் அலுவல் மொழியாக அறிவிக்க வலியுறுத்துவது
தீர்மானம் 7: புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்கு மாநில அந்தஸ்த்து வழங்க வலியுறுத்துவது
தீர்மானம் 8: முந்தைய அதிமுக அரசு கொண்டுவந்த நலத்திட்டங்களுக்கு மூடுவிழா நடத்தும் விடியா திமுக அரசுக்கு கண்டனம்
தீர்மானம் 09: மக்கள் மீது அடுக்கடுக்கான கட்டண சுமைகளை சுமத்தி வரும் விடியா திமுக அரசுக்கு கண்டனம்
தீர்மானம் 10: விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த தவறிய விடியா திமுக அரசுக்கு கண்டனம்
தீர்மானம் 11: சட்ட விரோத சீர்கேடுகளை தடுக்க தவறிய திமுக அரசுக்கு கண்டனம்
தீர்மானம் 12: மகளிர் உரிமைத் தொகையை அனைத்து குடும்பத் தலைவிகளுக்கு வழங்காமல் ஏமாற்றும் விடியா திமுக அரசுக்கு கண்டனம்
தீர்மானம் 13: இரண்டே ஆண்டுகளில் 3 லட்சம் கோடி கடன் வங்கி தமிழகத்தை கடன்கார மாநிலமாக்கிய விடியா திமுக அரசுக்கு கண்டனம்
தீர்மானம் 14: தமிழகம் விவசாயிகளை வஞ்சித்து, காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பின் படி காவிரி நீரை பெறாமல் வேடிக்கை பார்க்கும் விடியா திமுக அரசுக்கு கண்டனம்