அதில், ''அம்மாவை ஸ்டிக்கர்ல பாத்துருக்கிறீங்க, பேனர்ல பாத்துருக்கிறீங்க, ஏன் டீவியில கூட பார்த்துருக்கிறீங்க... ஆனா நேர்ல பார்த்துருக்கிறீங்களா?'' என்று அந்த விளம்பரம் கேட்கிறது. உச்சக்கட்டமாக 'என்னமா இப்படி பண்றீங்களேம்மா? என்று நக்கலாக தெரிவித்து இருந்தனர்.
இந்த நிலையில், திமுகவுக்கு உடனே பதிலடி கொடுக்கும் விதமாக அதிமுக அதிரடி நடவடிக்கையில் இறங்கியது. அதன் விளைவாக ஒரு ஆடியோ வெளியிடப்பட்டுள்ளது. அதிமுக சார்பில்தான் அந்த ஆடியோ வெளியாகியிருக்கும் என்றாலும், யார் வெளியிட்டது என்ற விவரம் தெரியவில்லை.
வாட்ஸ்அப் பெஞ்ச் என்ற அந்த ஆடியோவில், இருவர் பேசிக் கொள்வது போலவும், அவர்கள் திமுகவை கிண்டலடித்து பேசுவது போலவும் அந்த ஆடியோ அமைந்துள்ளது.