கரூர் முன்னாள் அதிமுக மாவட்ட செயலாளரும், கரூர் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ வும், தமிழக முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, கரூர் அரசு கலைக்கல்லூரியின் முன்னாள் மாணவரும் ஆவார்.
ஆனால் அவர் படித்த கரூர் அடுத்த தாந்தோன்றிமலை அரசு கலைக்கல்லூரியின் 50வது ஆண்டு விழா இன்று கரூர் மாவட்ட ஆட்சியர் கோவிந்தராஜ் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மக்களவை துணை சபாநாயகர் தம்பித்துரை, தமிழக போக்குவரத்து துறையின் தற்போதைய அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் உள்பட பல முக்கிய வி.ஐ.பி க்கள் கலந்து கொண்டனர்.
இதற்கான காரணம் இன்றுதான் முன்னாள் மாணவர்களுக்கு தெரிந்துள்ளது. அதாவது கல்வியில் விலையில்லா கல்வியை எதிர்நோக்கியிருக்கும் தமிழக அரசும், தமிழக அரசை நன்கு வழிநடத்தும் முதல்வர் ஜெயலலிதாவிற்கு நல்ல பெயர் சூட்டப்படுவதற்காக கல்வியை அரசு முறையிலும், அரசு வழியிலும் பயில்வதற்காக உழைத்தவர் செந்தில் பாலாஜி என்றும், அந்த கல்வியை கட்டணக் கல்வியாக மாற்றியதோடு, அதை தமிழக அளவில் மட்டுமில்லாமல் இந்திய அளவில் கல்வி நிறுவனங்களை தனியார் மயமாக பாடுபட்டவர் மற்றும் பாடுபட்டு வருபவர் தம்பித்துரை என்றும் இங்கு படித்த முன்னாள் மாணவர்கள் புலம்பிய வண்ணம் உள்ளனர்.