சசிகலாவிடம் இருந்து எம்.பி. பதவி பறிப்பு?

வியாழன், 7 ஜனவரி 2016 (23:19 IST)
அதிமுக மகளிரணி செயலாளர் பொறுப்பிலிருந்து சசிகலா புஷ்பாவிடம் இருந்து எம்.பி. பதவி பறிக்கப்படும் அபாயம் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 

 
அதிமுக பொதுச் செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிவிப்பில், அதிமுக மகளிரணி செயலாளர் பொறுப்பிலிருந்து சசிகலா புஷ்பா விடுவிக்கப்படுகிறார். அதற்கு பதில், அந்த பதவிக்கு, தமிழக கைத்தறித் துறை அமைச்சர் எஸ். கோகுல இந்திரா நியமனம் செய்யப்பட்டுள்ளார் என தெரிவித்தார். மேலும், சசிகலா புஷ்பா வகித்து வந்த செயற்குழு உறுப்பினர் பதவியையும் அவர் பறித்துள்ளார்.
 
இந்த நிலையில், சசிகலா புஷ்பா வகித்து வரும் எம்.பி.பதவியும் விரைவில் பறிக்க முதல்வர் ஜெயலலிதா முடிவு செய்துள்ளக கூறப்படுகிறது. இதற்கு காரணமாக குறப்படுவது என்னவென்றால், சசிகலா புஷ்பா சில மணல் மாபியா கும்பலிடம் நெருங்கிய தொடர்பு வைத்திருந்தார் என்றும் பல முக்கிய டீலிங் எல்லாம் மறைமுகமாக நடைபெற்றுள்ளதும் கார்டனுக்கு ஆதாரங்களுடன் புகார் சென்றதே காரணம் என கூறப்படுகிறது. 

வெப்துனியாவைப் படிக்கவும்