பி.ஹெச்.டி படிப்பு சர்ச்சையில் சிக்கிய அதிமுக எம்.பி

சனி, 13 பிப்ரவரி 2016 (03:30 IST)
அதிமுக எம்.பி. சசிகலா புஷ்பா பி.ஹெச்.டி. படிப்பு குறித்து சர்ச்சையாக வெடித்துள்ளது.
 

 
நெல்லை மேயராக இருந்த சசிகலா புஷ்பா பின்பு ராஜ்யசபா எம்.பி.யாக நியமிக்கப்பட்டார். எம்.ஏ. மட்டுமே முடித்துள்ள அவர் கடந்த 2012 ஆம் ஆண்டு நெல்லை மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தில் பி.ஹெச்.டி. நேரடி வகுப்பில் சேர்ந்தார்.
 
இதனையடுத்து, 2015 டிசம்பர் மாதம் தனது பி.ஹெச்.டி. ஆய்வறிக்கையை சமர்ப்பித்து, பிப்ரவரி 13 ஆம் தேதி அன்று முனைவர் பட்டத்தை தமிழக ஆளுநர் ரோசைய்யாவிடம் இருந்து பெற உள்ளார்.
 
இந்த நிலையில், மேயர் மற்றும் ராஜ்யசபா எம்.பி. என அதிக பணிச்சுமமை உள்ள பதவிகளில் இருந்து கொண்டு சசிகலா புஷ்பா எப்படி நேரடி வகுப்பில் கலந்து கொண்டு ஆய்வறிக்கையை சமர்பிக்க முடியும் என சர்ச்சை கிளம்பியுள்ளது. அவரது கல்வி வருகைப்பதிவோடு குறித்து விசாரணை நடத்த மார்க்சிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. ஆனால், இந்த கோரிக்கையை பல்கலைக்கழகம் நிராகரித்துள்ளது. 

வெப்துனியாவைப் படிக்கவும்