ஓ.பி.எஸ் பக்கம் சாய்ந்து விடக்கூடாது என்பதற்காக, அதிமுக எம்.எல்.ஏக்கள் கடந்த 8ம் தேதி, கிழக்கு கடற்கரை சாலை, கூவத்தூரில் உள்ள கோல்டன் பே ஹசுஸ் எனும் விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
செல்போன், செய்தித்தாள், தொலைக்காட்சி என எந்த வசதியும் அவர்களுக்கு வழங்கப்படவில்லை எனத் தெரிகிறது.. தாங்கள் கட்டுப்பாட்டில் இருக்கிறோம் என்கிற உணர்வு வரக்கூடாது என்பதற்காக, அவர்களுக்கு வேறு மாதிரியான வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.