அமைச்சர்கள் மூலம் செக் வைக்கும் தினகரன்? - அதிர்ச்சியில் எடப்பாடி பழனிச்சாமி

திங்கள், 3 ஜூலை 2017 (13:26 IST)
சில அதிமுக அமைச்சர்களை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக செயல்பட வைக்கும் முயற்சியில் அதிமுக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது.


 

 
சிறையிலிருந்து வெளியே வந்த தினகரனை இதுவரை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சந்தித்து பேசவில்லை. மேலும், அவரின் பதவிக்கு உரிய மரியாதையையும் எடப்பாடி தரப்பு தரவில்லை. இது தினகரனுக்கும், அவரது ஆதரவாளர்களுக்கும் கடும் கோபத்தை ஏற்படுத்தியது.
 
இது தொடர்பாக ஏற்கனவே தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் முதல்வரை கோட்டையில் சந்தித்து பேசினர். அப்போதும் தினகரனுக்கு உரிய அங்கீகாரத்தை கொடுக்க வேண்டும் என கூறினார். ஆனாலும், அதற்கு எடப்பாடி செவி சாய்க்கவில்லை.


 

 
இதனால் பொறுமையை இழந்த தினகரன் ஆதரவு அமைச்சர்கள் சிலர், எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக களம் இறங்க முடிவு செய்துள்ளனர் என செய்திகள் உலா வருகிறது. விரைவில் அவர்கள் செய்தியாளர்களை சந்தித்து எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக பேட்டி கொடுக்க  முடிவெடுத்துள்ளதாக தெரிகிறது.
 
இதையடுத்து, அவர்களை சமாதானப்படுத்தும் முயற்சியில் எடப்பாடி அணியினர் ஈடுபட்டனர். ஆனால், அதில் அதை அவர்கள் ஏற்கதாதால், முதல்வர் தரப்பு அதிர்ச்சியில் இருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது. 

வெப்துனியாவைப் படிக்கவும்