தமிழக அமைச்சருக்கு எதிராக அதிமுகவினர் போராட்டம்: போலீஸ் தடியடி - கலவர அபாயம்

வெள்ளி, 6 நவம்பர் 2015 (01:42 IST)
தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு எதிராக போராட்டம் நடத்திய 1000க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.


 

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி ஒன்றிய தலைவர் கெங்கையம்மாள் மற்றும் அவரது கணவரும்,
முன்னாள் ஒன்றிய செயலாளருமான சொக்கலிங்கம் ஆகிய இருவரும், தமிழக சுகாதரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரை சந்திக்க முயன்றுள்ளனர். அப்போது அவர்களை சாதி பெயரை சொல்லி அமைச்சர் விஜய பாஸ்கர் திட்டியதாக  கூறப்படுகிறது.
 
இதனையடுத்து, அமைச்சர் விஜயபாஸ்கரை கண்டித்து, புதுக்கோட்டையில் உள்ள சின்னப்பா பூங்காவில் 1000க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டம் நடத்த முயன்றனர். ஆனால், அவர்களுக்கு காவல்துறை அனுமதி அளிக்கவில்லை.
 
இந்தநிலையில், தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்த முயன்றவர்களை காவல்துறையினர் தடியடி நடத்தி கைது செய்தனர். இந்த சம்பவத்தால் புதுக்கோட்டை மாவட்டத்தில் பெரும் பதட்டம் நிலவுகிறது. 
 

வெப்துனியாவைப் படிக்கவும்