கூவத்தூரில் அடித்து உதைக்கப்பட்ட அமைச்சர்?

செவ்வாய், 14 பிப்ரவரி 2017 (15:32 IST)
அதிமுகவில் ஓ.பன்னீர்செல்வம் சசிகலாவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கியதை அடுத்து அதிமுக எம்எல்ஏக்கள் உடனடியாக சசிகலாவால் கூவத்தூர் சொகுசு விடுதி ஒன்றில் சிறை வைக்கப்பட்டனர்.


 
 
இதனால் கடந்த சில தினங்களாக தமிழகத்தில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. சசிகலாவின் பிடியில் இருந்து தப்பித்து இதுவரை 11 எம்எல்ஏக்கள் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். மேலும் கூவத்தூரில் உள்ள பல எம்எல்ஏக்கள் வெளியே வந்தால் ஓபிஎஸுக்கு ஆதரவு அளிக்க உள்ளதாக தகவல்கள் வருகின்றன.
 
இந்நிலையில் கூவத்தூரில் அடைத்து வைக்கப்பட்டுள்ள அமைச்சர் ஒருவர் எப்படியாவது வெளியே சென்று உடனே பன்னீர்செல்வத்தை சந்திக்க வேண்டும் என கூறியதாக தகவல்கள் வருகின்றன.
 
அந்த அமைச்சர் அங்குள்ள பல எம்எல்ஏக்களிடம் ஓபிஎஸுக்கு ஆதரவு திரட்டியுள்ளார். இதனை இரண்டு நாட்களுக்கு முன்னர் கண்டுபிடித்த சசிகலா தரப்பினர் அந்த அமைச்சரை தனி அறையில் அடைத்து அடித்து உதைத்ததாக தகவல்கள் வருகின்றன.

வெப்துனியாவைப் படிக்கவும்