இன்னும் தேர்தல் தேதியே அறிவிக்கப்படாத நிலையில் முன்னால் அதிமுக சட்டமன்ற உறுப்பினரும் தற்போதைய தினகரன் ஆதரவளாரனுமான தங்க தமிழ்செல்வன் தற்போது ஒரு புதுச் சர்ச்சையைக் கிளப்பியுள்ளார். திருப்பரங்குன்றத்தில் நடைபெற இருக்கும் இடைத்தேர்தலில் ஆளும் அதிமுக அரசு வெற்றி பெறுவதற்காக ஒரு வாக்குக்கு 5000 ரூபாய் வரைக் கொடுக்க முடிவெடுத்துள்ளதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.