சசிகலாவிற்கு எதிராக ஓ.பி.எஸ் களம் இறங்கியதும் அதிமுகவில் சசிகலா அணி, ஓ.பி.எஸ் அணி என இரண்டு பிளவு ஏற்பட்டது. ஆனால், எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக்கி ஆட்சியையும், டி.டிவி. தினகரனை துணைப் பொதுச்செயலாளராக நியமித்து கட்சியையும் சசிகலா தரப்பு தக்க வைத்துக்கொண்டுள்ளது.
இருப்பினும், அதிமுகவில் இருக்கும் தன்னுடய ஆதரவாளர்களை, தங்கள் பக்கம் இழுக்கும் முயற்சியில் ஓ.பி.எஸ் அணி தீவிரமாக ஈடுபட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து, ஒரு சில மாவட்ட செயலாளர்களுடன் பேச்சு வார்த்தையும் நடத்தப்பட்டுள்ளது.
இதை அறிந்த தினகரன் தரப்பு, அதிர்ச்சியாகி, அனைத்து மாவட்ட செயலாளர்களும் இன்று சென்னை வர வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளது. ஓ.பி.எஸ் அணிக்கு மாவட்ட நிர்வாகிகள் செல்வதை தடுக்கவே இந்த கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.