கூட்டணி கதவு மூடப்பட்டது - தவிக்கும் வாசன்

கே.என்.வடிவேல்

செவ்வாய், 5 ஏப்ரல் 2016 (00:40 IST)
அதிமுக கூட்டணியில் தமாகா இடம் பெறவில்லை.
\

 
கடந்த சில தினங்களாக, அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதாவை அவரது இல்லத்தில் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.
 
அவர்களில் சிலருடன் அமைச்சர்கள் வைத்திலிங்கம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர்  தேர்தல் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
 
இந்த நிலையில், அதிமுக கூட்டணயில் தமாகா இடம் பெறும் என பரவலாக பேசப்பட்டது. தமாகா-வுக்கு மாவட்டத்திற்கு ஒரு தொகுதி ஒதுக்க வேண்டும் என ஜி.கே.வாசன் கோரிக்கை விடுத்துள்ளார். ஆனால் அதிமுக தரப்பு ஏற்க மறுத்தவிட்டது. இதனையடுத்து, தமாகா தரப்பில் கடைசியாக 24 தொகுதிகள் முன்வைக்கப்பட்டது. ஆனால், இதை அதிமுக ரசிக்கவில்லை. இந்த நிலையில், 227 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா அறிவித்தார். இதனையடுத்து, அதிமுக கூட்டணியில் தமாகா-வுக்கு கூட்டணி கதவு மூடப்பட்டது. இந்த நிகழ்வு தமாகா தொண்டர்கள் மத்தியில் பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

வெப்துனியாவைப் படிக்கவும்