சமூக வலைதளங்களில் தொடர்ந்து பரவும் நடிகைகளின் ஆபாச வீடியோக்கள்

திங்கள், 22 ஜூன் 2015 (17:34 IST)
நடிகைகளின் ஆபாச மார்பிங் படங்கள் மற்றும் குளியல் காட்சிகள்  சமீபகாலமாக வாட்ஸ் அப் மற்றும் சமூக வலைதளங்களில் பரவுவது வழக்கமாகி விட்டது.
 

 
'பேராண்மை' படத்தில் நடித்த வசுந்தரா தனது நண்பருடன் படுக்கையில் நெருக்கமாக இருப்பது போன்ற படங்கள் இணையதளம் மற்றும் வாட்ஸ் அப்களில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளிவந்தன. ''அந்த படங்களில் இருப்பது நான் அல்ல'' என்று வசுந்தரா மறுத்தார்.
 
அடுத்து, ஆல்இன்ஆல் அழகுராஜா, 'வெற்றிச்செல்வன்' ஆகிய படங்களில் நடித்த ராதிகா ஆப்தே நிர்வாணமாக குளிப்பதை தனக்குத்தானே 'செல்பி'யில் படம் எடுப்பது போல் ஆபாசப் படங்கள் வெளிவந்தன. ''அந்த படங்களில் இருப்பது நான் அல்ல'' என்று ராதிகா ஆப்தேயும் மறுத்தார். ''வேறு ஒரு பெண்ணின் உடலுடன் என் முகத்தை இணைத்து 'மார்பிங்' செய்யப்பட்டு அந்த ஆபாசப் படங்கள் வெளியிடப்பட்டுள்ளன'' என்று அவர் கூறினார்.
 
இதேபோல், டார்லிங் படத்தில் நடித்த நிக்கி கல்ராணியின் ஆபாசப் படங்களும் வாட்ஸ் அப்களில் வெளியானது.
 
அதைத்தொடர்ந்து லட்சுமி மேனனின் ஆபாசப் படங்கள், வாட்ஸ் அப்களில் வெளிவந்தன. அவர் ஆண் நண்பருடன் படுக்கையில் நெருக்கமாக இருப்பது போல் படங்கள் வெளியானது. அவரும், ''அது நான் அல்ல'' என்று மறுத்து இருக்கிறார்.
 
ஹன்சிகாவை போன்ற உருவ தோற்றத்துடன் ஒரு பெண் குளிப்பது போன்ற படங்கள் சமூக வலை தளங்களில் வெளியாகியுள்ளன. ''ஹன்சிகாவின் குளியல் காட்சி'' என்ற பெயரில் அந்த படங்கள் வெளியிடப்பட்டுள்ளன. ''அந்த படத்தில் இருப்பது ஹன்சிகாவே அல்ல. இதுபோன்ற மோசமான செயல்களில் ஈடுபடுபவர்களை கடவுள் தண்டிப்பார்'' என்று ஹன்சிகா தரப்பில் கூறப்பட்டது.
 
தற்போது  மேலும் இந்த வரிசையில் இணைந்து இருப்பவர் அனுஷ்கா ஷெட்டி. அனுஷ்கா குளிப்பது போல் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.இந்த வீடியோ சமூக இணையதளம் மற்றும் வாட்ஸ் அப்களில் பரவி உள்ளது. இது தமிழ், தெலுங்கு பட உலகினரை மேலும் அதிர வைத்தது.
 
இந்த நிலையில் சோனியா அகர்வால் பெயரிலும் ஆபாச வீடியோ தற்போது பரவி வருகிறது. குளியல் அறையில் இந்த வீடியோ படத்தை எடுத்துள்ளனர். இந்த வீடியோ படத்தில் இருப்பது சோனியா அகர்வால் தானா அல்லது வேறு பெண்ணின் படத்தை மார்பிங் மூலம் சோனியா அகர்வால் போல் மாற்றி வெளியிட்டுள்ளார்களா? என்று தெரியவில்லை.
 
நடிகர் விவேக்குடன் சோனியா அகர்வால் நடித்துள்ள பாலகாட்டு மாதவன் படம் ஜூலை 3 ஆம் தேதி வெளியாகிறது.
 
இதுபோல் பாலிவுட் நடிகை ப்ரீத்தி குப்தா -வின் நிர்வாண படமும் ஆபாச வீடியோமும் தற்போது பரவி பரபரப்பை ஏற்படுத்திள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்