ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் தென்னரசுக்கு ஆதரவாக நடிகை விந்தியா பிரச்சாரத்தில் ஈடுபட்டார். ஒரு செங்கலை தூக்கிக்கொண்டு வந்து அமைச்சர் உதயநிதி8 ஸ்டாலின் பிரச்சாரம் செய்கிறார் என்றும் மதுரையில் கட்டப்படும் எய்ம்ஸ் மருத்துவமனைக்கும் ஈரோடு கிழக்கு தொகுதிக்கும் என்ன சம்பந்தம் என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
தமிழகத்தில் எத்தனையோ பிரச்சனை இருக்கும்போது முதலமைச்சர் கள ஆய்வு செய்து வருவது தேவைதானா என கேள்வி எழுப்பிய விந்தியா திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை, ராணுவ வீரர் கொலை, கோவை தென்காசியில் கொலை என திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட்டிருப்பதாகவும் 10 ஆண்டுகளாக நடந்த அதிமுக ஆட்சியில் தமிழகம் அமைதி பூங்காவாக இருந்தது என்றும் அவர் தெரிவித்தார்.