நடிகை சபர்ணா மரணம் தற்கொலைதான் - பிரேத பரிசோதனை அறிக்கையில் உறுதி

திங்கள், 14 நவம்பர் 2016 (15:01 IST)
நடிகை சபர்ணா தற்கொலைதான் செய்து கொண்டார் என்று அவரின் பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிய வந்துள்ளது.


 

 
சின்னத்திரை நடிகை சபர்ணாவின் உடல் மதுரவாயலில் உள்ள அவரது வீட்டில் இறந்த நிலையில் மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சின்னத்திரையில் நிகழ்ச்சி தொகுப்பாளராக அறிமுகமாகி, சன் டிவி மற்றும் விஜய் டிவி ஆகியவற்றில் புகழ்பெற்ற நடிகையாக திகழ்ந்தவர் சபர்ணா திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.
 
மதுரவாயலில் இவர் வசிந்து வந்த வீட்டில், கடந்த சனிக்கிழமை துர்நாற்றம் வீசியதால் அக்கம்பக்கத்தினர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். 
 
விரைந்த சென்ற காவல் துறையினர் சபர்ணாவின் உடலை உயிரிழந்த நிலையில் மீட்டனர். அவர் கடந்த வெள்ளிக்கிழமை தற்கொலை செய்திருக்கலாம் என கருதப்பட்டது. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு விசாரித்து வந்தனர். 
 
நடிகை சபர்ணா முழு நிர்வாண நிலையில் இறந்து கிடந்ததால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர். மேலும், அவரது கையில் பிளேடால் அறுத்த அடையாளங்கள் இருந்தன. இது அவரே அறுத்துக்கொண்டதா? அல்லது வேறு எவரேனும் செய்ததா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. 
 
இந்நிலையில், தனது மகளின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரின் தந்தை போலீசாரிடம் புகார் அளித்தார். ஆனால், சபர்ணா தற்கொலைதான் செய்து கொண்டார் என்று அவரது பிரேத பரிசோதனையில் தெரிய வந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். 
 
மேலும், அவரின் தற்கொலைக்கு யார் காரணம் என போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்