நடிகை நக்மா சென்னைக்கு நாளை மீண்டும் வருகை

புதன், 21 அக்டோபர் 2015 (06:38 IST)
தமிழக மகளிர் காங்கிரஸ் காங்கிரஸ் அலுவலக திறப்பு விழாவில் கலந்து கொள்ள நடிகை நக்மா நாளை சென்னை வருகிறார்.
 

 
நடிகை நக்மா, கடந்த 15 ஆம் தேதி நடிகை நக்மா சென்னை வந்தார். மறுநாள், அவருக்கு சத்தியமூர்த்தி பவனில் நடைபெற இருந்த வரவேற்பு நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது. இதனால், கடந்த 17ஆம் தேதி, துாத்துக்குடியில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சி மண்டல மாநாட்டில் நடிகை நக்மா பங்கேற்கவில்லை. இது குறித்து அகில இந்திய தலைமையிடம் நடிகை நக்மா புகார் செய்தாதக கூறப்படுகிறது.
 
இந்தநிலையில், சென்னை, சத்தியமூர்த்தி பவனில் தமிழக மகளிர் காங்கிரஸ் காங்கிரஸ் அலுவலக திறப்பு விழாவில் கலந்து கொள்ள நடிகை நக்மா நாளை சென்னை வருகிறார்
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்