கமல் ஒரு encyclopedia, ஆனால்.. : கஸ்தூரி டுவிட்

வியாழன், 6 அக்டோபர் 2022 (10:37 IST)
நடிகர் கமல்ஹாசன் நேற்று அளித்த பேட்டியில் ராஜராஜ சோழன் காலத்தில் இந்து மதமே இல்லை என்று கூறியதற்கு நடிகை கஸ்தூரி தனது டுவிட்டரில் பதில் அளித்துள்ளார். 
 
ராஜராஜ சோழனை இந்து அரசனாக்க முயற்சிக்கிறார்கள் என வெற்றிமாறன் கூறியதை அடுத்து இது குறித்து நடிகர் கருணாஸ், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்பட பலர் தங்களது கருத்துக்களை தெரிவித்தது பரபரப்பை ஏற்படுத்தியது 
 
இந்த நிலையில் நேற்று பொன்னியின் செல்வன் திரைப்படத்தை பார்த்த பின் கமல்ஹாசன் பேட்டி அளித்தபோது ராஜராஜசோழன் காலத்தில் இந்து மதம் என்ற ஒன்று இல்லை என்றும் ஆங்கிலேயர்கள் வைத்த பெயர்தான் இந்து மதம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்
 
அவருடைய இந்த கருத்துக்கு ஆதரவும் எதிர்ப்பும் கிளம்பி வருகிறது. இதனிடையில் கமல்ஹாசனின் இந்த கருத்து குறித்து நடிகை கஸ்தூரி தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது:
 
கமல் ஒரு encyclopedia . அவர் தன் அறத்தையும் அறிவாற்றலையும் அரசியல் narrative காக சமரசம் செய்து  கொள்வது வருத்தம் . ஆதி மனிதன் தன்னை ஒரு போதும் மனிதன் என்று கூறி கொண்ட வரலாறு எதுவும் இல்லை.அந்த காலத்தில் homo sapiens என்ற பேரே இல்லை.  so அவன் மனிதனே இல்லை என்பது என்ன வாதம்?


Edited by Mahendran
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்