அவரின் தற்கொலைக்கு நான் காரணமில்லை - நிலானி விளக்கம்

செவ்வாய், 18 செப்டம்பர் 2018 (15:06 IST)
காந்தி லலித்குமார் என்பவருடன் நெருக்கமாக பழகிவிட்டு, தன்னை திருமணத்திற்கு வற்புறுத்துகிறார் என சீரியல் நடிகை நிலானி புகார் கொடுக்க, விரக்தியில் காந்தி லலித்குமார் தன் உடல் மீது பெட்ரோல் ஊற்றி தற்கொலை செய்து கொண்டார்.  

 
இறப்பதற்கு முன் காந்தி லலித்குமார் நண்பர்களுக்கு அனுப்பிய சில புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. அதில், படுக்கையில் இருவரும் ஒன்றாக உறங்கும் காட்சி உள்ளிட்ட இருவரும் நெருக்கமாக பல காட்சிகள் இடம் பெற்றுள்ளது. 
 
இதுகுறித்து அவரிடம் விளக்கம் பெற போலீசார் முயன்றனர். ஆனால், அவரது செல்போன் அணைத்து வைக்கப்பட்டிருந்தது. எனவே, அவரின் வீட்டிற்கு போலீசார் சென்றனர். ஆனால், அங்கும் அவர் இல்லை என செய்திகள் வெளியானது. 
 
இந்நிலையில், இன்று காலை கமிஷனர் அலுவகம் வந்த நிலானி ஒரு மனுவை அளித்தார். அதில் ‘எனது காதலர் காந்தி என்கிற லலித்குமாரின் தற்கொலைக்கு நான் காரணம் அல்ல. அவரை திருமணம் செய்து கொள்ளும் முடிவில் நான் இருந்தேன். ஆனால், குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி என்னிடமிருந்து தொடர்ந்து பணம் பறித்துக்கொண்டே இருந்தார். எனவே அவரை விட்டு விலகுவது என முடிவெடுத்தேன். சமூக வலைத்தளங்களில் நானும் காந்தியும் நெருக்கமாக இருந்த புகைப்படங்களை பரப்பி என் மீது அவதூறான செய்திகளை வெளியிடுகிறார்கள். அவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்” என அந்த மனுவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்