பாஜக-வில் சேர்ந்தார் நடிகர் விஜயகுமார்

புதன், 16 மார்ச் 2016 (15:21 IST)
நாட்டாமை, சிங்கம் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்த பிரபல குணச்சித்திர நடிகர் விஜயகுமார் இன்று பாரதீய ஜனதா கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டார்.


 
 
சென்னை தியாகராஜ நகரில் உள்ள பாரதீய ஜனதா கட்சி அலுவலகத்தில் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தலைமையில் பாஜகவில் சேர்ந்தார் நடிகர் விஜயகுமார். இவர் 100-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
 
நடிகர் சங்கத்தில் துணைத் தலைவராக இருந்த இவர், சமீபத்தில் நடந்த நடிகர் சங்க தேர்தலில் விஷால் அணியிடன் தோல்வியை தழுவியது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்