அத்துடன், சென்னை பனையூரில் கட்சி நிர்வாகிகளை சந்தித்த விஜய், மக்கள் பணியை துரிதப்படுத்த வேண்டுமென்று அறிவுறுத்தினார். அத்துடன் அடிக்கடி கட்சி நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை வழங்கி வருகிறார்.
இந்நிலையில், தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் உத்தரவின் பேரில், உறுப்பினர் சேர்க்கையை அதிகரிப்பது மற்றும் உட்கட்சிக் கட்டமைப்பு விரிவாக்கம் தொடர்பாக நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் சென்னை பனையூரில் உள்ள தலைமை நிலையச் செயலக அலுவலகத்தில் காலை 9 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.