உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு வரவேற்பு, ஆனால்? : நடிகர் சரத்குமார் அறிக்கை

Webdunia
சனி, 29 செப்டம்பர் 2018 (10:30 IST)
சபரிமலை விவகாரத்தில் பெண்களுக்கு சம உரிமை வழங்கும் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்பதாக அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் அறிக்கை வெளியிய்ட்டுள்ளார்.

சபரிமலை ஐய்யப்பன் கோயிலுக்குள் பெண்கள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டு வரும் நிலையில் அதற்கு எதிரான வழக்கில் பெண்கள் கோயில் உள்ளே செல்ல அனுமதி அளித்து வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பை உச்சநீதிமன்றம் நேற்று அளித்தது.
இதை முன்னிட்டு பல தரப்பிலிருந்து பாராட்டுகளும் விமர்சனங்களும் வந்துகொண்டிருக்கின்றன. இதுதொடர்பாக அஇசமக கட்சியின் தலைவரும் நடிகருமான் சரத்குமார் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் ‘ஒரு குடிமகனாக இந்த் தீர்ப்பை வரவேற்கிறேன். இந்து கோயில்கள் அறிவியல் காரணங்களையும் சான்றுகளையும் அடிப்படையாக வைத்துக் கட்டப்பட்டுள்ளன. கட்டிட முறை. சிலைகளின் வடிவம், கோயில் திறப்பு மற்றும் சாத்தும் முறை போன்றவை பல ஆராய்ச்சிகளுக்குப் பிறகு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.’

’ஐயப்பன் கோயில் கோயில் வழிமுறைகளுக்கு பின்னுள்ள காரணங்களை ஆராயும்போது இப்பிரச்சனை ஆண் பெண் சம உரிமை என்பதை விட ஆழமானது. இக்கோவிலின் வழிமுறைகள், விரதமுறைகள், கோயிலை சென்றையும் பயண முறை ஒழுக்கமுறைக்கு கட்டுப்பட்டு வாழ்வதைக் கற்றுக்கொடுக்கின்றன,’

மதத்தில் அரசியல் தலையிடுவது குறித்து ‘ஆண் பெண் சம உரிமை என்பதை கோயிலில் மட்டும் நடைமுறைப்படுத்தாமல் நாட்டின் நிர்வாகத்தில் 33 சதவிகித இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த வேண்டும். மத பழக்க வழக்கங்கள் அனைத்திலும் அரசியல் நுழைந்தால் நாட்டின் ஒற்றுமையும் அமைதியும் குலையும்.’ எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்