குடிமக்களை குடிகார மக்களாக மாற்றிவிட்டனர்!. ஓட்டு போட வந்த சிவக்குமார் ஆவேசம்!..

Mahendran

வியாழன், 23 ஏப்ரல் 2026 (11:05 IST)
தமிழகத்தில் மதுபான கடைகள் என்பது பல வருடங்களாகவே பழக்கத்தில் இருக்கும் ஒன்று. பலரும் குடிப்பழக்கத்திற்கு ஆளாகியிருக்கிறார்கள். பலரும் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகவும் மாறிவிட்டார்கள். தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மதுபான கடைகளை அரசு மயமாக மாற்றினார். அதற்காகவே டாஸ்மாக் என்கிற நிறுவனமும் உருவாக்கப்பட்டது.

ஒவ்வொரு ஊரிலும் மதுபான கடைகளை தொடங்கி மதுபான பாட்டில்களை அரசே விற்பனை செய்து வருகிறது. மதுபான விற்பனை மூலம் அரசுக்கு ஒவ்வொரு வ்வருடம் பல ஆயிரம் கோடி வருமானம் வருவதால் மதுவிலக்கு என்கிற கொள்கை தமிழகத்தில் செயல்படுத்த முடியாத நிலையிலே இருக்கிறது. ஆட்சி மாறினாலும் யாரும் டாஸ்மாக்கை மூடுவதில்லை..

2026 சட்டமன்றத் தேர்தலுக்கு தேர்தல் வாக்குறுதிகளை அளித்த போது அதிமுக, திமுக, தமிழக வெற்றிக் கழகம் போன்ற எந்த கட்சியும் டாஸ்மார்க் மூடுவோம் என சொல்லவில்லை. இந்நிலையில்தான், ஒருபக்கம் நடிகர் சிவக்குமார் தொடர்ந்து குடிப்பழக்கத்திற்கு எதிராக கருத்து தெரிவித்து வருகிறார். மக்கள் எந்த கெட்ட பழக்கத்திற்கும் ஆளாகக்கூடாது எனத் தொடர்ந்த அறிவுரை சொல்லி வருகிறார்.

இந்நிலையில், இன்று தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நடக்கும் நிலையில், சென்னை தி.நகர் பகுதியில் உள்ள வாக்குச்சவடிக்கு வந்த சிவக்குமார் ‘குடிமக்களை குடிகார மக்களாக மாற்றி வைத்திருக்கிறார்கள்.. அது ஒழிய வேண்டும்.. யார் ஆட்சிக்கு வந்தாலும் மதுபான கடைகளை மூட வேண்டும்.. 40 சதவீத மக்கள் மதுவால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.. பலரின் வாழ்க்கை அழிந்து கொண்டிருக்கிறது.. கலைஞர் காலத்தில் இருந்தே இதை நான் சொல்லி வருகிறேன்.. இதை செய்வார்களா என்று எனக்கு தெரியாது.. ஆனால் இது என் கோர்க்கை’ என அவர் கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்