கமலஹாசன் கருத்துக்கு பாஜக ஹெச்.ராஜா பதிலடி

திங்கள், 12 அக்டோபர் 2015 (05:41 IST)
மட்டிறைச்சி குறித்து நடிகர் கமலஹாசன் கூறிய கருத்து எங்களுக்கு ஏற்புடையது அல்ல என்று பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா கருத்து தெரிவித்துள்ளார்.
 

 
இது குறித்து, வேலூரில், பாஜக அகில இந்திய செயலாளர் ஹெச்.ராஜா  செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
 
திமுக பொருலாளர் மு.க.ஸ்டாலின் திமுகவை இந்து கட்சி என கூறியுள்ளார். அவரது கருத்து வரவேற்க்க ஒன்றாகும். அதை மெய்பிக்கும் வகையில், அவர்களிடம் உள்ள பெரியார், அண்ணா படங்களை எடுக்க வேண்டும். இந்து சம்பிரதாயங்களை மதிக்க கற்றுக் கொள்ள வேண்டும். அப்போது தான் அவர்கள் மீது மக்களுக்கு நம்பிக்கை வரும்.
 
பாரத பிரதமர் மோடி குறித்து தவ்ஹீத் ஜமாத் பேச்சாளர் அன்சாரி தொடர்ந்து தவறாக பேசி வருகிறார். இது வன்மையாக கண்டிக்கதக்கது. எனவே, அவரை உடனே தமிழக காவல்துறை கைது செய்ய வேண்டும். தமிழகத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ் கட்சிகள் தீவிரவாதிகளுக்கு ஆதரவு அளித்து வருகிறது. இது வெட்ககேடான செயல் ஆகும்.
 
மட்டிறைச்சி குறித்து, பாஜக ஏற்கனவே தனது கருத்தை முன்வைத்துவிட்டது. இதற்கு பாரத பிரதமர் நரேந்திர மோடியும் விளக்கம் அளித்துவிட்டார். இந்த நிலையில், நடிகர் கமல்ஹாசன் அது குறித்து தவறான பிரிதல் கொண்ட கருத்தை தெரிவித்துள்ளார். அரவது கருத்தில் எங்களுக்கு ஏற்புடையது இல்லை. அவர் தனது கருத்தை முறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றா். 
 

வெப்துனியாவைப் படிக்கவும்