இதில் தனுஷ் தரப்பில் அவரது பத்தாவது வகுப்பு பள்ளி சான்றிதழ் சமர்பிக்கப்பட்டது. அதில் அவரது அங்க அடையாளங்கள் எதுவும் குறிப்பிடப்படவில்லை. ஆனால், கதிரேசன் தரப்பில் நீதிமன்றத்தில் சமர்பிக்கப்பட்ட பள்ளி மாற்று சான்றிதழில் அங்க அடையாளங்கள் குறிப்பிடப்பட்டிருந்தன. எனவே, வழக்கை விசாரித்த நீதிபதி, அங்க அடையாளங்களை சரிபார்க்க, பிப்ரவரி 28ம் தேதி (இன்று) தனுஷ் நேரில் ஆஜராக வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.