அதன் பின், நடிகர் வையாபுரி தேம்பி தேம்பி அழுவது போல் ஒரு வீடியோ வெளியானது. அதே வீடியோவில் நடிகையும், நடன இயக்குநருமான காயத்ரி ரகுராம், இதுக்குத்தான் இந்த மாதிரி எச்சைங்களோட நான் வர மாட்டேன்னு சொன்னேன். நான் ஃபர்ஸ்ட்டே சொன்னேன். எனக்கு யார் அவங்க என கூறுகிறார்.
இந்நிலையில், தற்போது விஜய் டிவி மீண்டும் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளது. அதில், ஜூலியிடம் நமீதா, சினேகன் மற்றும் சிலர் சண்டை போடுகிறார்கள். அதன் பின் தனியாக அமர்ந்திருக்கும் ஜுலியிடம் நடிகர் தரணி ‘உன்னை அவர்கள் டார்கெட் செய்கிறார்கள். நீ திருப்பி அடி.. அடங்கிவிடுவார்கள்’ என அறிவுரை கூறுகிறார்.