ராதிகா குளிக்கும் போது.... சரத்குமார் படித்தவர் தானா?: விளாசும் ஆனந்தராஜ்!

சனி, 8 ஏப்ரல் 2017 (15:26 IST)
நடிகர் ஆனந்தராஜ் சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். ஆர்கே நகர் தேர்தல் குறித்து பேசிய அவர், நடிகர் சரத்குமாரை கடுமையாக விமர்சித்தார்.


 
 
தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா மரணமடைந்த பின்னர் அதிமுகவின் தலைமை பதவியை அவசர அவசரமாக சசிகலா கைப்பற்ற முயன்றதை முதலில் எதிர்த்தவர் அந்த கட்சியில் நட்சத்திர பேச்சாளராக இருந்த நடிகர் ஆனந்தராஜ். அதன் பின்னர் சசிகலா அதிமுகவின் பொதுச்செயலாளராக பதவியேற்கும் முன்னர் தான் அதிமுகவில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.
 
இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர் ஆர்கே நகர் மக்களை யாரும் விலைக்கு வாங்க முடியாது. டிடிவி தினகரனை தவிர வேறு யாருக்கு வேண்டுமானாலும் வாக்களியுங்கள். ஆர்கே நகரில் தினகரனை வெற்றி பெறச் செய்தால் ஜெயலலிதாவுக்கு ஆர்கே நகர் மக்கள் துரோகம் செய்தது போலாகும் என்றார்.
 
தொடர்ந்து பேசிய அவர் நேற்று நடைபெற்ற வருமான வரித்துறை சோதனை குறித்தும் கருத்து தெரிவித்தார். அப்போது நடிகர் சரத்குமார் வருமான வரித்துறை சோதனையின் போது செய்தியாளர்களை சந்தித்து பேசிய போது ராதிகா குறித்து பேசியதை கடுமையாக விமர்சித்தார் ஆனந்தராஜ்.
 
நடிகர் சரத்குமார் தனது மனைவி ராதிகா குளித்துக்கொண்டிருக்கும் போது வருமானவரித்துறையினர் கதவை தட்டினர் என கூறினார். இது எந்த மாதிரியான கருத்து. ஒரு படித்தவர் இப்படி பேசமாட்டார், நடிகர் சரத்குமார் படித்தவர் தானா என கடுமையாக பேசினார் நடிகர் ஆனந்தராஜ்.

வெப்துனியாவைப் படிக்கவும்