பாகுபலி படத்திற்கு எதிப்பு: மதுரையில் தியேட்டர்கள் மீது பெட்ரோல் குண்டுவீச்சு

வியாழன், 23 ஜூலை 2015 (01:53 IST)
பாகுபலி திரைப்படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மதுரை தியேட்டர் மீது வெடி குண்டுவீச்சு நடைபெற்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 

 
மிகுந்த எதிர்ப்பார்ப்புகளுக்கிடையே  கடந்தவாரம் பாகுபலி படம் வெளியானது. ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ள இப்படம் வசூலிலும் சாதனை படைத்துவருகிறது.
 
இப்படத்தில் இறுதிக் காட்சியில் பகடை என புனைப்பெயரில் அழைக்கப்படும் அருந்ததியர் சமுதாயம் குறித்து அவதூறாக வசனங்கள் பேசும் காட்சி இடம் பெற்றுள்ளதாக சர்ச்சைகள் எழுந்தன.
 
இதையடுத்து, பாகுபலி திரைப்படத்தை தடை செய்ய வேண்டும் என வலியுறுத்தி ஆதித்தமிழர் கட்சியினர் கடந்த வெள்ளிக்கிழமை திருநெல்வேலியில் பாகுபலி திடையிடப்பட்டுள்ள ரத்னா திரையரங்கை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த போலீஸார் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட  2 பெண்கள் உள்பட 21 பேரை கைது செய்தனர்.
 
இந்த நிலையில், மதுரையில் உள்ள தமிழ், ஜெயா என்ற இரண்டு திரையரங்குகளில் பாகுபலி திரையிடப்பட்டுள்ளது. அந்த இரு திரையங்கள் மீது புரட்சிப் புலிகள் என்ற அமைப்பைச் சேர்ந்த சிலர் பெட்ரோல் குண்டுகளை வீசினர். இந்த சம்பவத்தில் அங்கிருந்த யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. இதனையடுத்து, குண்டு வீசியவர்கள் மதுரை தள்ளாகுளம் காவல்நிலையத்தில் 7 பேர் சரணடைந்தனர்.
 
இப்படத்தில் இடம் பெறும் வசனம் குறிப்பிட்ட சமூகத்தினரை அவமதிப்பதாக மதுரை மாவட்ட கலெக்டர் சுப்பிரமணியத்திடம் கடந்த வாரம் மனு கொடுக்கப்பட்டது குறிப்பிடதக்கது. 
 

வெப்துனியாவைப் படிக்கவும்