இன்று, வழக்கம்போல் தண்ணீர் விநியோகம் செய்து விட்டு திரும்பி வந்தபோது பொன்னேரி-திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் ஆந்திராவில் இருந்து இரும்பு உருளை லோடு ஏற்றிவந்த லாரி டிராக்டரின் பின்பக்கமாக மோதி விபத்துக்குள்ளானது.
இதில் சுதாகர், சரண்ராஜ் இருவரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக பலியாகினர். விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த மீஞ்சூர் போலீசார் இருவரது உடலைமீட்டு பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும்,வழக்குப்பதிவு செய்து விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.