நீட் தேர்வை ரத்து : மாணவர்களின் குரலை என்றென்றும் எதிரொலிப்போம்.- அமைச்சர் உதயநிதி

Sinoj
சனி, 6 ஜனவரி 2024 (21:15 IST)
தமிழகத்தில்  முதலமைச்சர்  மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி நடந்து வரும் நிலையில்,  கடந்த அக்டோபர் 21 அன்று தொடங்கி வைத்த நீட்விலக்கு நம் இலக்கு கையெழுத்து இயக்கம் தொடங்கி வைக்கப்பட்டது.

இந்த நிலையில், இணையம் மற்றும் அஞ்சல் அட்டைகள் வழியாக 80 லட்சத்துக்கும் அதிகமான தமிழ்நாட்டு மக்கள் கையெழுத்திட்டு வருவதாக அமைச்சர்   உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது: 
 
''நீட் அநீதிக்கு எதிரான ஜனநாயகப் போராக  ‘நீட் விலக்கு - நம் இலக்கு’ கையெழுத்து இயக்கத்தை கடந்த அக்டோபர் மாதம் தொடங்கினோம். 
 
இந்த கையெழுத்து இயக்கத்தில் https://banneet.in இணையம் மற்றும் அஞ்சல் அட்டைகள் வழியாக 80 லட்சத்துக்கும் அதிகமான தமிழ்நாட்டு மக்கள் கையெழுத்திட்டு வரும் நிலையில், சேலம் மேற்கு மாவட்ட தி.மு.கழகம் சார்பில் அஞ்சல் அட்டை வழியாக பெறப்பட்ட கையெழுத்துகளை இன்று பெற்றுக் கொண்டோம். 
 
நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்ற தமிழ்நாட்டு மக்கள் - மாணவர்களின் குரலை என்றென்றும் எதிரொலிப்போம்.''என்று தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்