ஆதார் அட்டை பெற பயோமெட்ரிக் பதிவு செய்து ஆதார் அட்டை இதுவரை பெறாதவர்களின் பெயர் இந்தப் பட்டியலில் இடம் பெற்றிருப்பின், அவரது பெயருக்கு எதிரே பதிவாகியுள்ள 12 இலக்கம் கொண்ட ஆதார் எண்ணை குறித்து, அரசின் பொது சேவை மையத்தின் மூலம் ரூ.30 செலுத்தி ஆதார் அட்டை பெறலாம்.
மேலும், இதுவரை ஆதார் அட்டை பெறாதவர்கள் அல்லது பயோமெட்ரிக் பதிவு செய்தும் ஆதார் எண் கிடைக்கப் பெறாதவர்கள், அவர்களது பெயர், தந்தை பெயர், முகவரி மற்றும் 27 இலக்கங்கள் கொண்ட தேசிய மக்கள் தொகை பதிவேட்டின் எண் போன்ற தகவல்கள் கிராம நிர்வாக அலுவலர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.