பிறந்தநாள் நாள் கொண்டாட்டம் - பட்டாக்கத்தியால் கேக் வெட்டிய வாலிபர் கைது

சனி, 28 ஜூலை 2018 (11:13 IST)
சென்னையில் வாலிபர் ஒருவர் பட்டாக்கத்தியால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடியதற்காக கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை ஜாபர்கான்பேட்டை அன்னை சத்யா நகரைச் சேர்ந்தவர் சதீஷ் (24). சதீஷ் மருந்து கம்பெனி ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். சதீஷின் பிறந்தநாளன்று, நள்ளிரவு அவரது நண்பர்கள், கேக்குடன் சதீஷ் வீட்டிற்கு சென்றனர்.
 
பின்னர் வீட்டிற்கு வெளியே ரோட்டில் கேக் வெட்ட திட்டிமிட்டு, சதீஷின் நண்பர்கள் அவரை பட்டாக்கத்தியால் கேக் வெட்ட கூறினர். அவரும் அவ்வாறே செய்தார். இதனை அவரது நண்பர்கள் வீடியோவாக எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்டனர். 
 
இந்த வீடியோவை பார்த்த எம்.ஜி.ஆர். நகர் போலீசார் சதீஷை கைது செய்தனர். மக்களை அச்சுறுத்தும் வகையில் சதீஷ் செயல்பட்டதாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்