முகநூல் வழியாக ஆண்களுடன் பழகி பல கோடி ஏமாற்றிய இளம்பெண்

வியாழன், 11 ஜனவரி 2018 (16:24 IST)
இளம்பெண் ஒருவர் முகநூல் வழியாக பல ஆண்களை திருமணம் செய்துக்கொள்வதாக கூறி, அவர்களிடமிரிந்து பல கோடி ரூபாய் மோசடி செய்துள்ளார். மோசடி செய்த இளம்பெண்ணை போலீஸார் கைது செய்துள்ளனர்.
சென்னையை சேர்ந்த மென்பொருள் பொறியாளர் பாலமுருகன் (27). இவருக்கு கோவையை சேர்ந்த சுருதி என்ற பெண்ணுடன் முகநூலில் பழக்கம் ஏற்பட்டது. பழகிய சில மாதங்களில் சுருதி பாலமுருகனை காதலிப்பதாகவும், நாம் இருவரும் திருமணம் செய்து கொள்வோம் என கூறியுள்ளார். இந்நிலையில் சுருதி தனது அம்மாவுக்கு உடல்நிலை சரியில்லை எனக்கூறி தவணை முறையில் பாலமுருகனிடம் ரூ.45 லட்சம் பெற்றுள்ளார். பாலமுருகனும் வருங்கால மனைவி என நம்பி பணம் கொடுத்துள்ளார். பணத்தை பெற்ற சுருதி சிறிது நாட்களில் பாலமுருகனின் நட்பை துண்டித்தார். இதையடுத்து தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த பாலமுருகன் இதுகுறித்து கோவை சைபர் கிரைம் காவல்துறையினரிடம் புகார் அளித்தார். 
 
இதையடுத்து பி.என்.பாளையத்தை சேர்ந்த சுருதி (21), தாய் சித்ரா (45), சகோதரர் பிரசன்னவெங்கடேசன்(38) ஆகிய மூவரை கைது செய்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். இதில் சுருதியின் தாய் மற்றும் சகோதரர், உண்மையான சொந்தங்கள் இல்லை, அவர்கள் வாடகைக்கு நடிப்பவர்கள் எனத் தெரியவந்தது. சுருதி பாலமுருகனைப் போல் பல ஆண்களை ஏமாற்றி பல கோடி மோசடி செய்து பணம் பரித்தது தெரியவந்துள்ளது.


                                       சுருதி,சித்ரா மற்றும் பிரசன்ன வெங்கடேசன்
இதனையடுத்து மோசடியில் ஈடுபட்ட மூவரையும் கைது செய்த போலீஸார் அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 







 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்